Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/26/2020
john jebaraj song
worship song
levi song


எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது

சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்

உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்

ஏற்றமாய் தோன்றும்
பாதைகளிலெல்லாம்
பின்னிலே தாங்கிடும்
உள்ளங்கை அழகு

சருக்கலாய் தோன்றும்
பாதைகளிலெல்லாம்
பின்னலாய் தாங்கிடும்
உம் விரல்கள் அழகு

நான் எந்த நிலை என்றாலும்
என்னை விட்டு போகாமல்
நிற்பதல்லோ உம் அழகு
விட்டு கொடுக்காத பேரழகு

உலகத்தின் கண்ணில்
பெரும்பான்மை என்றால்
அதிகம்பேர் நிற்பதே
அவர் சொல்லும் கணக்கு
அப்பா உம் கண்ணில்
தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால்
பெரும்பான்மை எனக்கு

அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு

Category

🎵
Music

Recommended