Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/27/2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நாடக கலைஞர்கள் வீதி வீதியாக சென்று நிதி திரட்டினர்.

தருமபுரி மாவட்ட நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு தங்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கினர் .மேலும் தெருக்கூத்து நாடக கலைஞர்கள் மகாபாரத வேஷமிட்டு .பீமன், கிருஷ்ணன், முனிவர்கள், அனுமன், பெண் வேடம் என பல்வேறு வேடங்கள் தரித்து தருமபுரி கோட்டை கோவில் வளாகத்தில் இருந்து தருமபுரி நகரப் பகுதியின் வழியாக பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியை நிதி திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட நாடக மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் கலந்து கொண்டனர். தெருக்கூத்து நாடக கலைஞர்கள் பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டியும் தருமபுரி பகுதியில் தொடர்ந்து சேர்த்து சேர்த்து தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டு அவை புயல் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என நாடக கலைஞர்களின் மாவட்ட தலைவர் சின்னசாமி தெரிவித்தார் நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சிங்காரவேலு உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Des: People suffering from the Gaja storm suffered a strolling street in the streets of Terekuku dramatists.

Category

🗞
News

Recommended