Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/12/2018

மலையேறும் பயிற்சிக்கு அழைத்துச் சென்றவர்கள் விதிகளை மீறி தமிழக வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுவே மாணவிகள் உயிரிழக்கவும், காயமடையவும் காரணமாகியுள்ளது. போடியில் இருந்து 12 கிமீ தொலைவில் குரங்கணி மலைப்பகுதி உள்ளது. நேற்று தீவிபத்து நடந்த கொழுக்குமலை மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது. கொழுக்குமலை சுற்றுலாத்தலம் மட்டுமின்றி மலையேற்றப் பயிற்சி பெறுவதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மலையேற்ற பயிற்சிக்கு வருகின்றனர். நேற்றைய தினம் மலையேற்றப் பயிற்சிக்கு வந்தவர்கள் மாணவிகள் வனத்துறை அனுமதியின்றி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் கேரளா வழியாக குரங்கணிக்கு இறங்கி வரும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதுவே அசம்பாவிதம் நடக்க முக்கிய காரணமாக உள்ளது.

Category

🗞
News

Recommended