Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/2/2018
ஒரு வழியாக அரசியலில் இறங்கிவிட்டார் கமல் ஹாசன். அதற்கு முன்பு திரையிலும் சரி, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி ஏராளமான சர்ச்சைகள் அவரைச் சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கிறது. திரையில் எப்படி நவீனத்துவமாக பேசி புரட்சி பேசுகிறாரோ அதே போலத் தான் தன்னுடைய அன்றாட வாழ்க்கையிலும் இருந்தார். இதனால் அவர் பெற்றதை விட இழந்தது சற்று அதிகம் தான். காதல் மன்னனாக திரையில் ஜொலித்தாலும் கமலுக்கு திருமண வாழ்க்கை என்னவோ செட் ஆகவில்லை. கடைசியாக நடிகை கௌதமியுடன் லிவ்விங் டூ கெதர் ரிலேசன் ஷிப்பிலிருந்தும் பிரிந்தார்கள். இந்த நேரத்தில் கமலின் முதல் மனைவியான வாணி கணபதி பற்றிய சில தகவல்கள். வாணி கணபதியின் தந்தை கணபதிக்கு ஃபார்மாஷூட்டிக்கல் கம்பெனியில் வேலை என்பதால் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழ வேண்டிய சூழல். சென்னையில் வாணி கணபதி பிறந்த நேரத்தில் அப்பாவுக்கு நாக்பூரில் வேலை. அதன் பிறகு குடும்பத்துடன் கொல்கத்தாவில் செட்டில் ஆகிவிட்டார்கள். வாணிக்கும் நடனம் மீது தான் அதீத விருப்பம் இருந்தாலும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறதல்லவா அதனால் மருத்துவம் படித்துக் கொண்டே டான்சர் என்று திட்டமிட்டார். திட்டத்தின் படி பள்ளியில் அறிவியல் பாடத்தை எடுத்துப் படித்தார். ஒரு கட்டத்தில் படிப்பா? நடனமா ? என்ற சூழல் வந்த போது தடுமாறி நின்ற வாணியை புரிந்து கொண்டார் கணபதி. அதோடு, மகளிடம்.... உனக்கு எதுல விருப்பமோ அதுல கவனம் செலுத்து, மத்தவங்கள திருப்திபடுத்துறதுக்காக உன் கனவை இழந்திடாத என்று அட்வைஸ் செய்ய மகளுக்கு செம்ம ஹேப்பி.... மருத்துவக் கனவு அன்றோடு முடிந்தது. அதன் பிறகு முழு நேர பரதநாட்டியக் கலைஞராக தன்னை மெருகேற்றிக்கொண்டார். தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பற்றியும் மட்டும் சிந்திக்காமல் இந்த சமூகத்தின் மீதும் தனக்கு அக்கறையிருக்கிறது என்பதை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார் வாணி கணபதி. பெங்களூரில் இருக்கிற பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் கமிட்டியின் கலை,கலாச்சார பிரிவு பொறுப்பாளராக இருக்கிறார். இதன் முக்கிய பணி பொதுமக்களின் பிரச்சனைகளை ஆட்சியாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது.


Life Story of Vani Ganapathy

Category

🗞
News

Recommended