Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/25/2018
சென்னை: பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தொகுத்த தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமி அரங்கத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்பது சர்ச்சைக்குரியதாகியுள்ளது. அதே மேடையில், தமிழறிஞரும், திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவருமான சாலமன் பாப்பையாவும் பங்கேற்ற போதிலும், அவரும் விஜயேந்திரரிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி விஜயேந்திரரை எழுந்திருக்க சொல்லவில்லை என்ற விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், சாலமன் பாப்பையா அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. சமஸ்கிருத மொழிக்கும் தமிழுக்கும் முந்தைய காலங்களில் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள சாலமன் பாப்பையா, சமஸ்கிருத மொழியை கற்க வேண்டும் எனவும் அறிவுரை கூறுகிறார்.

Category

🗞
News

Recommended