Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/11/2017
நயன்தாரா நடிப்பில் 'அறம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் குடிநீர் பிரச்னை பற்றியும் அரசின் அலட்சியம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என வழக்குத் தொடுத்த கோபி நயினார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 'கத்தி', 'அறம்' ஆகிய இரண்டு படங்களுமே சமூக நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள்தான். இரண்டு படங்களும் ஷார்ப்பான வசனங்களோடு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் 'கத்தி' படத்தில் நீரரசியல் அழுத்தமாகப் பேசப்பட்டது போல, நயன்தாராவின் 'அறம்' படம் முழுமைக்கும் நீரரசியலும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கமும் பேசப்படுகிறது. குடிநீர் பஞ்சம் எனும் மையக்கருத்தைச் சுற்றித்தான் 'அறம்' மொத்தக் கதையும் பயணிக்கிறது.

Nayanthara starer 'Aramm' Movie is being released and fans are getting welcome. The film is about water politics. Little Comparison to 'Kaththi' and 'Aramm' films are there.

Recommended